தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

Posted On: 06 MAY 2024 8:45PM by PIB Chennai

மக்களவைத் தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. வானிலை நிலைமைகள் சாதாரண வரம்புகளுக்குள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாக்காளர்களின் வசதிக்காக, வெப்பமான காலநிலையைச் சமாளிக்க தண்ணீர், ஷாமியானா, மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் உட்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துல்லியமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில்  பொறுப்புடனும் பெருமையுடனும் வாக்களிக்குமாறு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மூன்றாம் கட்ட தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, வாக்குப்பதிவு நாட்களுக்கு முன்னும் பின்னும் தேசிய மற்றும் மாநிலச் சின்னங்களைக் கொண்ட செய்திகள் மற்றும் குரல் அழைப்புகளை எளிதாக்குவதற்காக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், பாரதி ஏர்டெல் லிமிடெட், ஜியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் மற்றும் வோடபோன்-ஐடியா லிமிடெட் ஆகிய நான்கு முக்கிய தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்துள்ளது. அனைத்து நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், யூனிகார்ன் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்கவும், தேர்தல் ஆணையத்தின் தூதர்களாகவும், செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் மாற வேண்டும் என்றும் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

2024 பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு 93 நாடாளுமன்றத் தொகுதிகளில் 2024 மே 7 ஆம் தேதி நடைபெறும் (பொது- 72; எஸ்.டி-11; எஸ்.சி-10) 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது

1.85 லட்சம் வாக்குச்சாவடிகளில் சுமார் 18.5 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் 17.24 கோடி வாக்காளர்களை எதிர்கொள்ள விடுக்கிறார்கள்.

17.24 கோடி வாக்காளர்களில் 8.85 கோடி பேர் ஆண்கள், 8.39 கோடி பேர் பெண்கள்.

4303 பறக்கும் படைகள், 5534 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 1987 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 949 வீடியோ பார்க்கும் குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வாக்காளர்களை தூண்டும் நடவடிக்கைகளை கடுமையாகவும், விரைவாகவும் கையாள்கின்றன.

வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு தேதி ஆகியவற்றை இந்த இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம் https://electoralsearch.eci.gov.in/

***

PKV/BR/KV

 

 

 


(Release ID: 2019820) Visitor Counter : 127