நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பதினாறாவது நிதிக்குழு இளம் தொழில் திறன் பணியாளர்கள் / ஆலோசகர்களுக்கான பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது

Posted On: 12 APR 2024 12:24PM by PIB Chennai

பதினாறாவது நிதிக்குழு இளம் தொழில் திறன் பணியாளர்கள் / ஆலோசகர்களுக்கான பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கான தகுதி, விதிமுறைகள், ஊதிய விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் https://fincomindia.nic.in என்ற நிதிக்குழுவின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

16-வது நிதிக்குழுவில் ஒப்பந்த அடிப்படையில் இளம் தொழில் திறன் பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்களாக பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம். 16-வது நிதிக்குழுவின்  இயக்குனருக்கு manish.kr1975@]nic.in   என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த இணையதள இணைப்பைப் பார்க்கலாம்

https://fincomindia.nic.in/asset/doc/Guidelines%20for%20YPs%20&%20Consultants%20in%2016th%20Finance%20Commission.pdf

----

ANU/PKV/PLM/KPG/KV



(Release ID: 2017740) Visitor Counter : 85