பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி அதிபர் திரு ஜெலன்ஸ்கியுடன் உரையாடினார்


இந்தியா-உக்ரைன் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

இந்தியாவின் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை வலியுறுத்திய பிரதமர், மோதலைத் தவிர்க்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

அமைதி தீர்வுக்கு ஆதரவாக இந்தியா தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் எடுத்துரைத்தார்.

உக்ரைன் மக்களுக்காக இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதை அதிபர் திரு ஜெலன்ஸ்கி பாராட்டினார்

प्रविष्टि तिथि: 20 MAR 2024 6:19PM by PIB Chennai

உக்ரைன் அதிபர் திரு வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

 

பல்வேறு துறைகளில் இந்தியா-உக்ரைன் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து விவாதித்த பிரதமர், இந்தியாவின் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மீண்டும் வலியுறுத்தியதுடன், பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய நடவடிக்கைகளை முன்னோக்கி செல்ல அழைப்பு விடுத்தார்.

இருதரப்பினருக்கும் இடையேயான அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவான மற்றும் அமைதியான தீர்வுக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். அமைதியான தீர்வுக்கு ஆதரவாக இந்தியா தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூறினார்.

உக்ரைன் மக்களுக்காக இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதை அதிபர் திரு ஜெலன்ஸ்கி பாராட்டினார்.

இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.

***

AD/IR/RS/DL


(रिलीज़ आईडी: 2015767) आगंतुक पटल : 133
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam