தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஆபாசப் பதிவுகள் இடம்பெற்ற ஓடிடி தளங்களுக்கு எதிராக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை
Posted On:
14 MAR 2024 11:43AM by PIB Chennai
ஆபாசப் பதிவுகள் இடம்பெற்ற 18 ஓடிடி தளங்களை முடக்கி தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 19 இணையதளங்கள், 10 செயலிகள் (கூகுள் பிளே ஸ்டோரில் 7, ஆப்பிள் செயலி ஸ்டோரில் 3) மற்றும் இந்தத் தளங்களுடன் தொடர்புடைய 57 சமூக ஊடக கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
ஆக்கப்பூர்வமான கருத்து என்ற அடிப்படையில் ஆபாசம், அவதூறு ஆகியவற்றை பரப்பக்கூடாது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் பலமுறை வலியுறுத்தியுள்ளார். 2024, மார்ச் 12 அன்று ஆபாச பதிவுகளை வெளியிடும் 18 ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக திரு தாக்கூர் அறிவித்தார்.
மத்திய அரசின் பிற அமைச்சகங்கள், துறைகள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, பெண்கள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற துறை வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் விதிகளின் கீழ் சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டது.
இந்தத் தளங்களில் இடம்பெற்ற கணிசமான பகுதி ஆபாசமாக இருந்ததுடன், பெண்களை இழிவான முறையில் சித்தரித்தது கண்டறியப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2014477
***
PKV/IR/RS/KV
(Release ID: 2014582)
Visitor Counter : 176
Read this release in:
Assamese
,
Gujarati
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu