மத்திய அமைச்சரவை

பூடானுக்கு பெட்ரோலியம், எண்ணெய், மசகு எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்களை விநியோகிப்பது குறித்து இந்தியா மற்றும் பூடான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 13 MAR 2024 3:24PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவிலிருந்து பூடானுக்கு பெட்ரோலியம், எண்ணெய், மசகு எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்களை சப்ளை செய்வது தொடர்பாக இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாலினம், வர்க்கம் அல்லது வருமான பாகுபாடுகளைப் பொருட்படுத்தாமல், குறிப்பாக ஹைட்ரோ கார்பன் துறையில் பூடானுடன் மேம்பட்ட பொருளாதார மற்றும் வணிகத் தொடர்புகளுடன் இந்தியாவுக்கும், அதன் குடிமக்களுக்கும் பயனளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

பயன்கள்

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹைட்ரோகார்பன் துறையில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதோடு, பூடானுக்கு பெட்ரோலியப் பொருட்களின் பாதுகாப்பான மற்றும் நீண்டகால விநியோகத்தை உறுதி செய்யும்.

ஏனெனில், தற்சார்பு பாரதத்தை நனவாக்குவதில் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்சார்பு இந்தியாவுக்கு ஊக்கமளிக்கும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொருத்தமாக இருக்கும்.

***

PKV/RS/KV

 



(Release ID: 2014159) Visitor Counter : 72