இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் அரசு பணிக்குத் தகுதியானவர்கள் விளையாட்டுத் துறையில் பாரதத்தை வல்லரசாக மாற்றுவதில் நமது விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் திருத்தப்பட்ட விதிகள் சிறப்பான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன: திரு அனுராக் சிங் தாக்கூர்
Posted On:
06 MAR 2024 5:34PM by PIB Chennai
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் தற்போது அரசுப் பணிகளுக்குத் தகுதியானவர்கள் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் அறிவித்துள்ளார்.
வலுவான விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு, அடித்தள நிலைகளிலும் திறமைகளை வளர்ப்பது, விளையாட்டை லாபகரமான, சாத்தியமான தொழில் விருப்பமாக மாற்றுவது குறித்த நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குக்குப் பார்வைக்கு இணங்க, கேலோ இந்தியா விளையாட்டு வீரர்கள் தற்போது அரசுப் பணிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்று அவர் கூறினார். "பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, இந்திய விளையாட்டுத் துறையுடன் கலந்தாலோசித்து, அரசுப் பணிகளுக்கு முயற்சிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான தகுதி அடிப்படையில் மேம்பட்டத் திருத்தங்களைச் செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
***
AD/IR/RS/KRS
(Release ID: 2012019)
Visitor Counter : 113
Read this release in:
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam