பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்


வனவிலங்கு பாதுகாப்புக்கான பல்வேறு கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக செயல்படும் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்

Posted On: 29 FEB 2024 8:54PM by PIB Chennai

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிறுத்தைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, பல்லுயிர் பெருக்கத்திற்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.

வன உயிரின பாதுகாப்புக்கான பல்வேறு கூட்டு முயற்சிகளில் பங்கேற்றுள்ள அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் சிறுத்தைகளின் எண்ணிக்கை தற்போது 13,874 ஆக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் 12,852 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

இன்று இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்த அறிக்கை வெளிவந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், மத்திய இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் வசிப்பதாக  புள்ளிவிவரங்கள் பதிவாகியுள்ளது என்றும் மத்தியப் பிரதேசத்தில் 3,907 சிறுத்தைகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சரின் இந்த எக்ஸ் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இது மிக நல்ல செய்தி! சிறுத்தைகளின் எண்ணிக்கையில் இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, பல்லுயிர் பெருக்கத்திற்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். நிலையான சகவாழ்வுக்கு வழி வகுக்கக் கூடிய வனவிலங்கு பாதுகாப்பின் பல்வேறு கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக செயல்படும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.”

***

ANU/AD/PLM/DL


(Release ID: 2010881) Visitor Counter : 78