பிரதமர் அலுவலகம்
2023-24-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வலுவான 8.4% மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும், அதன் திறனையும் காட்டுகிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
29 FEB 2024 8:55PM by PIB Chennai
2023-24 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 8.4% என்ற வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் திறனையும் காட்டுகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். விரைவான பொருளாதார வளர்ச்சியைக் ஏற்படுத்தும் எங்கள் முயற்சிகள் தொடரும் என்றும், இது 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கையை வாழவும், வளர்ச்சி அடைந்த பாரத்தை உருவாக்கவும் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"2023-24-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வலுவான 8.4% மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் அதன் திறனையும் காட்டுகிறது. விரைவான பொருளாதார வளர்ச்சி சார்ந்த எங்கள் முயற்சிகள் தொடரும். இது 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கையை வாழவும், வளர்ச்சி அடைந்த பாரத்தை உருவாக்கவும் உதவும்.”
***
PLM/BR/AG/KV
(रिलीज़ आईडी: 2010485)
आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
हिन्दी
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Bengali
,
Assamese
,
Odia
,
Malayalam
,
Manipuri
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi