மத்திய அமைச்சரவை
சர்வதேச பெரும்பூனை கூட்டமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
29 FEB 2024 3:33PM by PIB Chennai
இந்தியாவில் சர்வதேச பெரும்பூனை கூட்டமைப்பை தலைமையகத்துடன் அமைப்பதற்கு 2023-24-ம் ஆண்டு முதல் 2027-28-ம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.150 கோடி மதிப்பிலான ஒருமுறை ஒதுக்கீட்டிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2019 உலகளாவிய புலிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி பிரதமர் உரையாற்றிய போது, புலிகள், இதர பெரிய பூனையினங்கள், ஆபத்தான உயிரினங்களைப் பாதுகாப்பதில் இந்தியாவின் முன்னணி பங்களிப்பு குறித்து குறிப்பிட்டார். இத்தகைய இனங்கள் ஆசியாவில் வேட்டையாடப்படுவதைத் தடுக்க கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று உலகத் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் உள்ளிட்ட பெரிய பூனை இனங்களில் புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, ஆகிய இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.
PKV/IR/AG/KRS
(Release ID: 2010203)
Visitor Counter : 169
Read this release in:
Odia
,
Kannada
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam