தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
'நாட்டுக்கான எனது முதல் வாக்கு' பிரச்சாரத்தில் பங்கேற்க மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்
பிரச்சார பாடலை மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் வெளியிட்டார்
Posted On:
27 FEB 2024 4:26PM by PIB Chennai
தேர்தல் நடைமுறையில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்றும், முதல் முறை வாக்காளர்களிடையே 'நாட்டுக்கான எனது முதல் வாக்கு' பிரச்சாரத்தின் செய்தியை தங்கள் சொந்த பாணியில் பரப்புமாறு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த தகவலை பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக இன்று மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் #MeraPehlaVoteDeshKeLiye பாடலை வெளியிட்டார். இப்பிரச்சாரம் இளம் வாக்காளர்களை தங்கள் ஜனநாயக உரிமையான வாக்களிக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாடலை கீழே உள்ள இணைப்பில் காணலாம்:
https://youtu.be/JuUkj5VVGZo
பாடலை வெளியிடுவது குறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சர் கூறியதாவது:
"நமது பிரதமர் திரு @narendramodi தனது சமீபத்திய மனதின் குரல் உரையில் ஒரு தெளிவான அழைப்பை விடுத்தார், நாடு அதன் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவிற்கு தயாராகி வரும் நிலையில், #MeraPehlaVoteDeshKeLiye பிரச்சாரத்தில் சேரவும், இளம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது #MeraPehlaVoteDeshKeLiye பாடலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2009406
***
ANU/PKV/IR/AG/KV
(Release ID: 2009462)
Visitor Counter : 165
Read this release in:
Assamese
,
Odia
,
Malayalam
,
Khasi
,
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Bengali-TR
,
Punjabi
,
Telugu
,
Kannada