வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், 2024 மார்ச் 5-ஆம் தேதி விஞ்ஞான் பவனில் முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகளை வழங்கவிருக்கிறது. குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு தலைமை தாங்கும் இந்த நிகழ்ச்சியில் நீர் துறையில் சிறந்து விளங்கும் நகரங்களும், மாநிலங்களும் கௌரவிக்கப்படும்.
நகரங்கள் மற்றும் மாநிலங்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பிரதிபலிக்கும் வகையில், 130 விருதுகள் வழங்கப்பட உள்ளன. மதிப்புமிக்க குடிநீருக்கான தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்தந்த மக்கள்தொகை பிரிவுகளில் (1 முதல் 10 லட்சம் வரை, 10 முதல் 40 லட்சம் வரை, 40 லட்சத்திற்கு மேல்) சிறந்த செயல்திறன் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுகளின்படி தங்கம் என்பது முதல் இடத்தையும், வெள்ளி என்பது இரண்டாவது இடத்தையும், வெண்கலம் மூன்றாவது இடத்தையும் குறிக்கின்றன.
சிறந்த நீர் அமைப்பு, நிலைத்தன்மை சாம்பியன், மறுபயன்பாட்டு சாம்பியன், நீர் தரம், நகர செறிவூட்டல் மற்றும் ஆண்டின் மதிப்புமிக்க அம்ருத் 2.0 சுழல் கோப்பை ஆகியவற்றிற்கான பாராட்டுகளுக்கு இந்த விருதுகள் நீட்டிக்கப்படுகின்றன. 485 நகரங்களில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உன்னிப்பான மதிப்பீடு, அணுகல், பாதுகாப்பு, சுத்திகரிப்பு நிலையங்கள், வீடுகளில் நீரின் தரம், நீர்நிலைகளின் ஆரோக்கியம் தொடர்பான நிலைத்தன்மை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் மறுபயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அளவுருக்களை உள்ளடக்கியது.
குடிநீர் கணக்கெடுப்பின் கீழ் என்.ஏ.பி.எல் ஆய்வக சோதனை மூலம் சுத்தமான தண்ணீர் உறுதி செய்யப்பட்டது . ஜி.ஐ.எஸ் சார்ந்த வலைப்பக்கம், புவி-குறியீடு மற்றும் உள்கட்டமைப்பு மேப்பிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கணக்கெடுப்பு துல்லியமான மற்றும் வெளிப்படையான தரவைச் சேகரித்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசதிகள், 5 லட்சம் குடும்பங்களின் பதில்கள் மற்றும் மதிப்பீடுகளுடன், 24,000-க்கும் மேற்பட்ட நீர் மாதிரிகளின் பரிசோதனை உட்பட ஒரு விரிவான மதிப்பீட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
***
(Release ID: 2009284)
ANU/PKV/BR/KV