பிரதமர் அலுவலகம்
சுமார் ரூ.41,000 கோடி மதிப்பிலான 2000-க்கும் மேற்பட்ட ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர்
அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ரூ.19,000 கோடிக்கும் அதிகமான செலவில் அமிர்த பாரத நிலையம் திட்டத்தின் கீழ் 553 ரயில் நிலையங்களை மறுசீரமைக்க அடிக்கல் நாட்டினார்
மறுசீரமைப்பு செய்யப்பட்ட கோமதி நகர் ரயில் நிலையத்தை தொடங்கி வைத்தார்
சுமார் ரூ.21,520 கோடி செலவில் நாடு முழுவதும் 1500 சாலை மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளுக்கு அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
"ஒரே நேரத்தில் 2000 திட்டங்கள் தொடங்கப்படுவதன் மூலம், இந்தியா அதன் ரயில்வே உள்கட்டமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண உள்ளது"
"இந்தியா தற்போது எதைச் செய்தாலும், அதை முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் அளவிலும் செய்கிறது. நாங்கள் பெரிய கனவுகளை காண்கிறோம், அவற்றை நனவாக்க அயராது உழைக்கிறோம். இந்த உறுதிப்பாடு இந்த வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ரயில்வே திட்டத்தில் காணப்படுகிறது"
"வளர்ச்சியடைந்த பாரதம் எவ்வாறு வெளிப்படும் என்பதை தீர்மானிக்க இளைஞர்களுக்கு அதிகபட்ச உரிமை உள்ளது"
" அமிர்த பாரத நிலையங்கள் வளர்ச்சி, பாரம்பரியம் ஆகிய இரண்டின்
Posted On:
26 FEB 2024 2:01PM by PIB Chennai
ரூ.41,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சுமார் 2,000 ரயில்வே கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். 500 ரயில் நிலையங்கள், 1500 பிற இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ரயில்வே நிகழ்வுடன் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்றைய நிகழ்ச்சி புதிய இந்தியாவின் புதிய பணிக் கலாச்சாரத்தின் அடையாளமாகும் என்று கூறினார். "இந்தியா தற்போது எதைச் செய்தாலும், அதை முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும், அளவிலும் செய்கிறது. நாங்கள் பெரிய கனவுகளை காண்கிறோம், அவற்றை நனவாக்க அயராது உழைக்கிறோம். இந்த உறுதிப்பாடு இந்த வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ரயில்வே திட்டத்தில் காணப்படுகிறது" என்று அவர் கூறினார். அண்மையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகம் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக ஜம்மு, குஜராத்தில் நடந்த நிகழ்வுகளில் இருந்து கல்வி, சுகாதாரத் துறை உள்கட்டமைப்பை பெருமளவில் விரிவுபடுத்தத் தொடங்கியதை அவர் குறிப்பிட்டார். இதேபோல், இன்றும் கூட, 12 மாநிலங்களில் உள்ள 300 மாவட்டங்களில் 550 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் கோமதி நகர் ரயில் நிலையத் திட்டம், 1500-க்கும் மேற்பட்ட சாலைகள், மேம்பாலத் திட்டங்கள் குறித்து பேசிய பிரதமர் திரு மோடி, புதிய இந்தியாவின் லட்சியம், தீர்மானத்தின் அளவு மற்றும் வேகத்தைச் சுட்டிக்காட்டினார்.
இன்று ரூ.40,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன என்று கூறிய பிரதமர், சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் உள்ள 500 ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட அமிர்த பாரத ரயில் நிலையத் திட்டத்தை தொடங்கியதை நினைவு கூர்ந்தார். இன்றைய நிகழ்ச்சி இந்த உறுதிப்பாட்டை மேலும் முன்னெடுத்துச் செல்வதுடன், இந்தியாவின் முன்னேற்ற வேகத்தின் ஒரு பார்வையை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். இன்றைய ரயில்வே திட்டங்களுக்காக இந்திய மக்களுக்குப் பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இன்றைய வளர்ச்சித் திட்டத்திற்காக இந்தியாவின் இளைஞர் சக்தியை பிரதமர் திரு மோடி சிறப்பாக பாராட்டினார், ஏனெனில் அவர்கள்தான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் உண்மையான பயனாளிகள் என்று அவர் கூறினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், பயனளிக்கும் என்றும் அவர் கூறினார். "வளர்ச்சியடைந்த பாரதம் எவ்வாறு வெளிப்படும் என்பதை தீர்மானிக்க இளைஞர்களுக்கு அதிகபட்ச உரிமை உள்ளது" என்று பிரதமர் திரு மோடி கூறினார். பல்வேறு போட்டிகள் மூலம் ரயில்வேயின் கனவுகளை நனவாக்கிய இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், வெற்றியாளர்களையும் வாழ்த்தினார். இளைஞர்களின் கனவுகள் மற்றும் கடின உழைப்பு, பிரதமரின் தீர்மானம் ஆகியவை வளர்ச்சியடைந்த பாரத திட்டத்தை உறுதி செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் அமிர்த பாரத நிலையங்கள் வளர்ச்சி, பாரம்பரியம் ஆகிய இரண்டின் அடையாளங்களாக இருக்கும் என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஒடிசாவில் உள்ள பாலேஷ்வர் நிலையம் பகவான் ஜெகந்நாதர் கோயிலின் கருப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், சிக்கிமின் ரங்க்பூர் உள்ளூர் கட்டிடக்கலையின் முத்திரையைக் கொண்டிருக்கும் என்றும், ராஜஸ்தானில் உள்ள சாங்னர் நிலையம் 16-ம் நூற்றாண்டின் கைவினை வடிவமைப்பை காட்சிப்படுத்தும் என்றும், தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள நிலையம் சோழர் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்றும், அகமதாபாத் நிலையம் மோதேரா சூர்ய கோயிலால் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும், துவாரகா நிலையம் துவாரகாதீஷ் கோயிலால் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப நகரம் குருகிராம் ரயில் நிலையம், "அமிர்த பாரத நிலையம் அந்த நகரத்தின் சிறப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும்" என்ற தகவல் தொழில்நுட்ப மையக்கருத்தைக் கொண்டு இருக்கும்" என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உகந்ததாக இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக்கப்பட்டது குறித்து பிரதமர் திரு மோடி மீண்டும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக ரயில்வேயில் மாற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது என்றும், கடந்த 10 ஆண்டுகளில், தொலைதூரத்தில் இருந்த வசதிகள் இப்போது வழக்கமாகியுள்ளன என்று குறிப்பிட்ட அவர், வந்தே பாரத், அமிர்த பாரத், நமோ பாரத் போன்ற நவீனமயமாக்கப்பட்ட பகுதியளவு அதிவேக ரயில்கள், ரயில் பாதைகளை விரைவாக மின்மயமாக்குதல், ரயில்களுக்கு உள்ளேயும், ரயில் நிலைய நடைமேடைகளிலும் தூய்மை ஆகியவற்றை உதாரணமாகக் கூறினார். இந்திய ரயில்வேயில் ஆளில்லா வாயில்கள் இருந்ததையும், மேம்பாலங்கள், சுரங்கங்கள் எவ்வாறு தடையற்ற, விபத்து இல்லாத இயக்கத்தை தற்போது உறுதி செய்துள்ளன என்பதையும் அவர் ஒப்பிட்டுக் கூறினார். விமான நிலையங்களில் உள்ளதைப் போன்ற நவீன வசதிகள் தற்போது ரயில் நிலையங்களில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கிடைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய ரயில்வே வசதி மக்களுக்கு எளிதான பயணத்திற்கான முக்கிய அம்சமாக மாறி வருகிறது என்று பிரதமர் கூறினார். ரயில்வேயின் மாற்றம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், பொருளாதாரம் உலக தரவரிசையில் 11-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு 45 ஆயிரம் கோடியாக இருந்த ரயில்வே பட்ஜெட் இன்று 2.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார். "உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசாக நாம் மாறும்போது நமது பலம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். எனவே, இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் மாற்ற மோடி கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஊழலின்மை காரணமாக பணம் சேமிப்பு, புதிய பாதைகளை விரைவாக அமைத்தலை இரட்டிப்பாக்குதல், ஜம்மு-காஷ்மீர் முதல் வடகிழக்கு வரை புதிய பகுதிகளுக்கு ரயில்களை இயக்குவது, 2,500 கிலோ மீட்டர் பிரத்யேக சரக்குப் போக்குவரத்துப் பாதையில் பணியாற்றுவது ஆகியவற்றின் மூலம் பணம் சேமிக்கப்பட்டதற்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். வரி செலுத்துவோரின் ஒவ்வொரு பைசாவும் பயணிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார். ஒவ்வொரு ரயில் டிக்கெட்டுக்கும் அரசால் 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
"வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்திற்கு வட்டி ஈட்டப்படுவதைப் போலவே, உள்கட்டமைப்புக்காக செலவிடப்படும் ஒவ்வொரு பைசாவும் புதிய வருமான ஆதாரங்களையும், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது" என்று குறிப்பிட்ட பிரதமர், புதிய ரயில் பாதைகள் அமைப்பது தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, பொறியாளராக இருந்தாலும் சரி, பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டார். சிமெண்ட், எஃகு மற்றும் போக்குவரத்து போன்ற பல தொழில்கள் மற்றும் கடைகளில் புதிய வேலைகளுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார். "தற்போது முதலீடு செய்யப்படும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஆயிரக்கணக்கான வேலைகளுக்கு உத்தரவாதம்" என்று பிரதமர் திரு மோடி புகழாரம் சூட்டினார். ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கடைகள் மூலம் சிறு விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் விஸ்வகர்மா நண்பர்களின் தயாரிப்புகளை ரயில்வே ஊக்குவிக்கும் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' திட்டம் குறித்தும் அவர் பேசினார்.
"இந்திய ரயில்வே ஒரு பயணிகள் வசதி மட்டுமல்ல, இந்தியாவின் வேளாண் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்தின் மிகப்பெரிய அம்சமாக உள்ளது" என்று குறிப்பிட்ட பிரதமர், விரைவான ரயில் போக்குவரத்தில் அதிக நேரத்தை மிச்சப்படுத்தும், அதே நேரத்தில் தொழில்துறை செலவுகளையும் குறைக்கும் என்று குறிப்பிட்டார். எனவே, மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று தெரிவித்தார். இந்தியாவின் நவீன உள்கட்டமைப்பை பாராட்டிய பிரதமர், உலகம் முழுவதும் முதலீடு செய்வதற்கு மிகவும் உகந்த இடமாக இந்தியா இருப்பதாகப் பாராட்டினார். அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை கூறி தனது உரையை நிறைவு செய்த பிரதமர், இந்த ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் போது, மிகப்பெரிய முதலீட்டில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறினார்.
பின்னணி
ரயில் நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். இந்த முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக, அமிர்த பாரத ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் 553 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்த நிலையங்கள், ரூ.19,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இந்த நிலையங்கள் நகரின் இருபுறமும் ஒருங்கிணைக்கும் 'நகர மையங்களாக' செயல்படும். அவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாகவும் மாற்றியமைக்கப்படும். இந்த நிலைய கட்டிடங்களின் வடிவமைப்பு உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றால் ஈர்க்கப்படும்.
மேலும், சுமார் 385 கோடி ரூபாய் மொத்த செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோமதி நகர் ரயில் நிலையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். அதிகரித்து வரும் எதிர்கால பயணிகளின் வருகையை பூர்த்தி செய்ய, இந்த நிலையம் வருகை, புறப்பாடு வசதிகளை தனித்தனியாக பிரித்துள்ளது. இது நகரத்தின் இருபுறமும் ஒருங்கிணைக்கிறது.
1500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள இந்த சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.21,520 கோடியாகும். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், பாதுகாப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்தும், ரயில் பயணத்தின் திறனை மேம்படுத்தும்.
***
(Release ID: 2009037)
ANU/PKV/IR/AG/KRS
(Release ID: 2009150)
Visitor Counter : 129
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam