பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கடல் சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்

Posted On: 06 FEB 2024 2:39PM by PIB Chennai

கோவாவில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். கடல் நீருக்கடியில் சிக்கும் போது தப்பிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் இந்தப் பயிற்சி மையம் குறித்த செயல்விளக்கங்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"கோவாவில் உள்ள ஓ.என்.ஜி.சி.யின் கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அதிநவீன மையம் கடல் உயிர்வாழ் பயிற்சி சூழல் அமைப்பில் ஒரு சிறந்த அடையாளத்தை உருவாக்குவதில் இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். கடுமையான மற்றும் தீவிரமான அவசரகாலப் பயிற்சியை வழங்குவதன் மூலம், பல உயிர்கள் சரியான நேரத்தில் காப்பாற்றப்படுவதை இது உறுதி செய்யும்.”

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஓ.என்.ஜி.சி கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையம்

ஓ.என்.ஜி.சி கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையம், இந்திய கடல் சூழல் உயிர்பிழைத்தல் தகவமைப்பை உலகத் தரத்திற்கு முன்னேற்றுவதற்காக ஒரு வகையான ஒருங்கிணைந்த பயிற்சி மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் 10,000 முதல் 15,000 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான வானிலை காலங்களில்  வழங்கப்படும் பயிற்சிகள் கடுமையான கடல் சூழலிலும் உயிர்வாழும் திறன்களை மேம்படுத்துகின்றன. இதனால் பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பாகத் தப்பிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

***

(Release ID: 2002991)

ANU/PKV/PLM/RS/RR


(Release ID: 2003057) Visitor Counter : 108