நிதி அமைச்சகம்
நமது இளைஞர்கள் விளையாட்டில் புதிய உயரங்களை எட்டியிருப்பது குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது: மத்திய நிதியமைச்சர்
Posted On:
01 FEB 2024 12:42PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் உரையில், நமது இளைஞர்கள் விளையாட்டில் புதிய உயரங்களை எட்டியிருப்பது குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது என்று கூறினார்.
விளையாட்டில் இளைஞர்களின் சாதனைகள்
2023-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப் பதக்கங்களை வென்றிருப்பது அதிக நம்பிக்கையை அளிக்கிறது என்று அவர் கூறினார். சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவின் வெற்றிகளை அவர் எடுத்துரைத்தார். சதுரங்க விளையாட்டில் இந்தியாவின் வெற்றி குறித்துப் பேசிய அவர், 2010-ம் ஆண்டில் 20 செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் 80-க்கும் அதிகமான கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர் என்றார்.
தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான திட்டங்கள்
வட்டியில்லா கடனுடன் கூடிய ரூ.1லட்சம் கோடி தொகுப்புத் திட்டத்துக்கான முன்மொழிவை அவர் எடுத்துரைத்தார். தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும் என்றும், நமது இளைஞர்களின் சக்திகளையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் திட்டங்கள் தேவை என்றும் அவர் கூறினார்.
***
(Release ID: 2001097)
ANU/ SMB/PLM/KRS
(Release ID: 2001574)
Visitor Counter : 149
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam