நிதி அமைச்சகம்
'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க அமிர்த காலம் கடமைக் காலமாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்
Posted On:
01 FEB 2024 12:37PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் இன்று 2024-2025-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி, பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைமையையும், இந்தியாவின் முன்னேற்றத்தில் அதன் தாக்கத்தையும் குறிப்பிட்டதுடன், 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க அமிர்த காலம் கடமைக்காலமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அமிர்த காலம் – கடமைக் காலம்
பெரும் வளர்ச்சியுடன் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும், மக்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். நமது குடியரசின் 75-வது ஆண்டில் பிரதமர், நாட்டிற்கு ஆற்றிய சுதந்திர தின உரையை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன், "புதிய உத்வேகங்கள், புதிய நனவு, புதிய தீர்மானங்களுடன், நாடு ஏராளமான திறன்களையும், வாய்ப்புகளையும் பெறும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்கிறோம்" என்று கூறினார். இதுதான் நமது உண்மையான கடமைக் காலம் என்று அவர் தெரிவித்தார்.
பொருளாதார மேலாண்மை, சிறந்த நிர்வாகம் மூலம் 2014 -ம் ஆண்டுக்கு முற்பட்ட அனைத்து சவால்களும் வெற்றிகொள்ளப்பட்டதாக அவர் கூறினார். "இவை நாட்டை நிலையான, பெரும் வளர்ச்சியின் உறுதியான பாதையில் கொண்டு சென்றுள்ளன. நமது சரியான கொள்கைகள், உண்மையான நோக்கங்கள், பொருத்தமான முடிவுகள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது" என்று அமைச்சர் கூறினார்.
"ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள முழுயான பட்ஜெட்டில், 'வளர்ச்சியடைந்த பாரதம்' நோக்கத்திற்கான விரிவான செயல் திட்டத்தை எங்கள் அரசு சமர்ப்பிக்கும்" என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2001087
***
ANU/SMB/IR/AG/RR
(Release ID: 2001267)
Visitor Counter : 111