பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
27 JAN 2024 8:14PM by PIB Chennai
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று சாம்பியன் பட்டம் வென்ற டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மீண்டும் ஒரு முறை, தனித்துவமான திறமையாளர் ரோஹன் போபண்ணா வயது ஒரு தடையல்ல என்பதைக் நிரூபித்துள்ளார்!
வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற அவருக்கு வாழ்த்துகள்.
நமது உத்வேகம், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவையே நமது திறன்களை வரையறுக்கின்றன என்பதை அவரது சிறப்பான இந்த பயணம் அழகாக நினைவூட்டுகிறது.
அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
*****
ANU/AD/DL
(रिलीज़ आईडी: 2000141)
आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam