பிரதமர் அலுவலகம்
பிரதமர் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 JAN 2024 7:05PM by PIB Chennai
தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார்.
மகான் கம்பன் தனது ராமாயணத்தை முதன்முதலில் வெளி உலகத்துக்கு அரங்கேற்றிய கோவிலில் கம்ப ராமாயணத்தின் பாராயணத்தையும் பிரதமர் கேட்டறிந்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஶ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த கோவிலுடனான பிரபு ஶ்ரீராமரின் தொடர்பு நெடியது. பிரபு ஸ்ரீ ராமர் வழிபட்ட கடவுளால் நானும் ஆசீர்வதிக்கப்பட்டதை பாக்கியமாக உணர்கிறேன்.”
*****
ANU/AD/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1998256)
வருகையாளர் எண்ணிக்கை : 182
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam