மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய கலா உத்சவ் 2023-ன் நிறைவு விழாவில் டாக்டர் சுபாஷ் சர்க்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோர் பங்கேற்றனர்
Posted On:
12 JAN 2024 3:22PM by PIB Chennai
கலா உத்சவ் 2023 நிறைவு விழாவில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார், வெளியுறவு மற்றும் கல்வி இணையமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கூடுதல் செயலாளர் ஸ்ரீ ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல்; என்.சி.இ.ஆர்.டி., இயக்குநர், பேராசிரியர் தினேஷ் பிரசாத் சக்லானி உட்பட பலர் பங்கேற்றனர். கலா உத்சவ் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜோத்ஸ்னா திவாரி, உத்சவ் குறித்த சுருக்கமான அறிக்கையை சமர்ப்பித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சுபாஷ் சர்க்கார், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தியதோடு, அவரது வார்த்தைகளை மேற்கோள் காட்டி, "கலை என்பது - அழகைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. எல்லாவற்றிலும் கலை இருக்க வேண்டும்” என்றார். கலா உத்சவ் மேடை படைப்பாற்றலைக் கொண்டாடுவது மட்டுமின்றி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது, இது தேசிய கல்விக் கொள்கை 2020-ல் எதிரொலிக்கிறது என்றும் அவர் கூறினார். தேசிய கல்விக் கொள்கை 2020 தனிநபரிடம் தார்மீக, கலாச்சார, நடைமுறை, பாரம்பரியம் தர்க்கரீதியான அறிவாற்றல் மற்றும் அடிப்படைத் திறன்களை வளர்க்கும் என்று டாக்டர் சர்க்கார் மேலும் கூறினார்.
நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கத்துடன் கலா உத்சவ்வை உருவாக்கியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் நன்றி தெரிவித்தார். எல்லைகளைக் கடந்து நம் வாழ்க்கையை வடிவமைப்பதிலும், பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதில் நம்மை ஒன்றிணைப்பதிலும் கலைக்கு உள்ள சக்தியின் அடையாளமாக கலா உத்சவ் திகழ்கிறது என்று அவர் கூறினார்.
மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான வழிமுறையாக கலை வடிவங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஸ்ரீ பாட்டீல் தனது உரையில் குறிப்பிட்டார். வளமான இந்திய கலாச்சார மரபுகள் குறித்தும் அவர் பேசினார்.
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) ஆகியவை 2024 ஜனவரி 9 முதல் 12 வரை புதுதில்லியில் உள்ள தேசிய பால பவன், காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதியில் கலா உத்சவ் 2023 -ஐ ஏற்பாடு செய்தன.
இந்த ஆண்டு 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 336 மாணவிகள், 334 மாணவர்களுடன், கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி ஆகியவை தங்கள் கலை வடிவங்களைக் காட்சிப்படுத்தின.
***
(Release ID: 1995483)
ANU/PKV/SMB/RS/KRS
(Release ID: 1995634)
Visitor Counter : 108
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam