பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JAN 2024 2:03PM by PIB Chennai

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவை உயரத்திற்கு கொண்டு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், விண்வெளித் துறையினருக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"2024-ல் ஒரு சிறந்த தொடக்கம், நமது விஞ்ஞானிகளுக்கு நன்றி! இந்த ஏவுதல் விண்வெளித் துறைக்கு ஓர் அற்புதமான செய்தியாகும். இது இந்தத் துறையில் இந்தியாவின் திறனை அதிகரிக்கும். இந்தியாவை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்குக் கொண்டு செல்லும் இஸ்ரோவின் நமது விஞ்ஞானிகள் மற்றும் ஒட்டுமொத்த விண்வெளி ஆய்வுத் துறையினருக்கும் வாழ்த்துக்கள்.”

***

ANU/PKV/SMB/AG/KV


(வெளியீட்டு அடையாள எண்: 1992096) வருகையாளர் எண்ணிக்கை : 206