சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொவிட் -19 தொற்றைக் கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்கான பொது சுகாதார அமைப்பின் கொவிட் -19 நிலைமை மற்றும் தயார்நிலையை டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்

Posted On: 20 DEC 2023 1:01PM by PIB Chennai

நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொவிட் -19 தொற்றைக் கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்கான பொது சுகாதார அமைப்பின் கொவிட் -19 நிலைமை மற்றும் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று தலைமை தாங்கினார். அவருடன் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல், டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகிய துறையின் இணையமைச்சர்கள் கலந்து கொண்டனர். நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் உடனிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சரும், சுகாதாரத்துறை  அமைச்சருமான  திரு அலோ லிபாங், உத்தரப்பிரதேச துணை முதலமைச்சரும், சுகாதாரத்துறை  அமைச்சருமான திரு பிரஜேஷ் பதக்,  உத்தராகண்ட் சுகாதாரத்துறை  அமைச்சர் திரு தன் சிங் ராவத் ஆகியோர்  நேரில் கலந்து கொண்டனர், தினேஷ் குண்டுராவ், சுகாதாரத்துறை அமைச்சர் (கர்நாடகா); அனில் விஜ், சுகாதாரத்துறை அமைச்சர் (ஹரியானா); திருமதி வீணா ஜார்ஜ், சுகாதாரத்துறை  அமைச்சர் (கேரளா), திரு விஸ்வஜித் பிரதாப்சிங் ரானே, சுகாதாரத்துறை  அமைச்சர் (கோவா); கேஷப் மஹந்தா, சுகாதாரத்துறை  அமைச்சர் (அசாம்), திரு பன்னா குப்தா, சுகாதாரத்துறை  அமைச்சர் (ஜார்கண்ட்); டாக்டர் பல்பீர் சிங், சுகாதாரத்துறை  அமைச்சர் (பஞ்சாப்); சவுரப் பரத்வாஜ், சுகாதார அமைச்சர் (டெல்லி); டாக்டர் (கர்னல்) தானி ராம் ஷாண்டில், சுகாதாரத்துறை  அமைச்சர் (இமாச்சலப் பிரதேசம்); பேராசிரியர் டாக்டர் தானாஜிராவ் சாவந்த், சுகாதாரத்துறை  அமைச்சர் (மகாராஷ்டிரா); தாமோதர் ராஜநரசிம்ஹா, சுகாதாரத் துறை அமைச்சர் (தெலங்கானா); டாக்டர் சபம் ரஞ்சன், சுகாதாரத்துறை  அமைச்சர் (மணிப்பூர்); நிரஞ்சன் பூஜாரி, சுகாதாரத்துறை  அமைச்சர் (ஒடிசா); ரங்கசாமி, முதலமைச்சர் (புதுச்சேரி) உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சீனா, பிரேசில், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் அதிகரித்து வரும் கொவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கையால் ஏற்படும் சவாலைச் சுட்டிக் காட்டிய மத்திய சுகாதாரத்துறை  அமைச்சர், கொவிட் -19-ன் புதிய மற்றும் உருமாற்றத்திற்கு எதிராகத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார், குறிப்பாக எதிர்வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கொவிட் தொற்று ஒழியவில்லை என்பதை மீண்டும் சுட்டிக்காட்டிய அவர்  அறிகுறிகள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

"முழு அரசு" அணுகுமுறையின் உணர்வில் வளர்ந்து வரும் நிலைமையைச் சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளின் அவசியத்தை டாக்டர் மாண்டவியா வலியுறுத்தினார். நாட்டில் பரவி வரும் புதிய மாறுபாடுகளைச் சரியான நேரத்தில் கண்டறிவதை உறுதி செய்வதற்காக இந்திய சார்ஸ்-கோவ்-2 ஜீனோமிக்ஸ் கன்சார்டியம் (இன்சாகோக்) கட்டமைப்பு மூலம் மாறுபாடுகளைக் கண்காணிக்க தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளின் முழு மரபணு வரிசைமுறைக்கான கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார். இதன் மூலம் உரிய பொது சுகாதார நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும், மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பை உறுதி செய்யவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தினார், பிஎஸ்ஏ ஆலைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு மத்திய மற்றும் மாநில நிலைகளில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மாதிரி ஒத்திகைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்,  சுவாச சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உண்மையான சரியான தகவல்களைப் பரப்புவதை உறுதி செய்யவும், எந்தவொரு பீதியையும் தணிக்க போலிச் செய்திகளை எதிர்கொள்ளவும் மாநிலங்களை அவர் வலியுறுத்தினார். சரியான நேரத்தில் கண்காணிக்கவும், பொது சுகாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உதவும் வகையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சோதனைகள் போன்ற தகவல்களைச் சரியான நேரத்தில் கொவிட் தளத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

உலகளாவிய COVID19 நிலைமை மற்றும் உள்நாட்டுச் சூழ்நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் விளக்கினார். உலகளாவிய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் உள்ள கொவிட் பாதிப்பு கணிசமாகக் குறைவாக இருந்தாலும், கடந்த இரண்டு வாரங்களில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023 டிசம்பர் 6 அன்று 115 லிருந்து இன்று 614 ஆக கடுமையாக உயர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. 92.8% பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும், இது லேசான நோயைக் குறிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதங்களில் எந்த அதிகரிப்பும் காணப்படவில்லை, மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் பிற மருத்துவ  காரணங்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1988564

***

ANU/PKV/IR/AG/KV

 



(Release ID: 1988729) Visitor Counter : 105