பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் திரு நெதன்யாகு பிரதமரிடம் விளக்கினார்.
கடல்வழி போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்து இரு தலைவர்களும் கவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
பேச்சுகள், ராஜ்ஜீய நடைமுறைகள் மூலம் மோதலுக்கு தீர்வு காண்பது மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
இடுகை இடப்பட்ட நாள்:
19 DEC 2023 6:50PM by PIB Chennai
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் திரு நெதன்யாகு பிரதமரிடம் விளக்கினார்.
கடல்வழி போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளை இரு தலைவர்களும் அப்போது பகிர்ந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பேச்சுகள் மற்றும் ராஜ்ஜிய நடைமுறை மூலம் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது உட்பட மோதலுக்கு விரைவான, அமைதியான முறையில் தீர்வுகாண்பது குறித்து வலியுறுத்தினார்.
பின்னர், இரு தலைவர்களும் தொடர்ந்து பேச்சு நடத்த ஒப்புக்கொண்டனர்.
***
(Release ID: 1988383)
ANU/SM/IR/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1988438)
வருகையாளர் எண்ணிக்கை : 176
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam