மத்திய அமைச்சரவை

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான புதுமைக் கண்டுபிடிப்புகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 15 DEC 2023 7:36PM by PIB Chennai

மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதுமைக் கண்டுபிடிப்புகள் மூலம் புத்தொழில் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

5-வது இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை 2023 மார்ச் 8 முதல் 10 வரை அமெரிக்க வர்த்தக அமைச்சர்  ஜினா ரைமண்டோவின் இந்தியப் பயணத்தின் போது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், விநியோக சங்கிலி, பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, உள்ளடக்கிய டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சியை எளிதாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. வர்த்தகப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் திறன்கள், புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்த புதிய பணிக்குழுவை (டிஐஐஜி) தொடங்க முடிவு செய்யப்பட்டது. 

ஜூன் 2023-ல், அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட கூட்டறிக்கையில், இரு தரப்பு , ஒத்துழைப்பிற்கான முயற்சிகளுக்கு வரவேற்புத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 2023 நவம்பர் 14அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், புதுமைக் கண்டுபிடிப்புகளில்      ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உயர் தொழில்நுட்பத் துறையில் வர்த்தக வாய்ப்புகளை வலுப்படுத்த கணிசமாக பங்களிக்கும்.

*******


ANU/PKV/PLM/DL



(Release ID: 1987122) Visitor Counter : 43