மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்னணு உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 15 DEC 2023 7:36PM by PIB Chennai

மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சவூதி அரேபிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இடையே கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்னணு உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக 2023 ஆகஸ்ட் 18 அன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

டிஜிட்டல் மயமாக்கல், மின்னணு உற்பத்தி, மின் ஆளுமை, ஸ்மார்ட் உள்கட்டமைப்பு, மின் சுகாதாரம் மற்றும் மின் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், டிஜிட்டல் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் கூட்டுச் செயல்பாட்டை ஊக்குவிக்கவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பொருட்களின் இணையம் (ஐஓடி), ரோபோக்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பிளாக்செயின் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உத்தேசித்துள்ளது.

*******


ANU/PKV/PLM/DL


(रिलीज़ आईडी: 1987121) आगंतुक पटल : 132
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam