இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் முதல் கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகள் 2023 ஐ தொடங்கி வைக்கிறார்

Posted On: 10 DEC 2023 6:48PM by PIB Chennai

கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகள் 2023-ஐ மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் நாளை புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்

புதுதில்லியில் மூன்று இடங்களில் டிசம்பர் 10 முதல் 17 வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் விளையாட்டு வாரியத்தின் சேவை நிறுவனங்களை சேர்ந்த 1400 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதன் தொடக்க விழா  இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள கேடி ஜாதவ் உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் டெல்லி போலீஸ் இசைக்குழுவினர் பிரமாண்டமான நிகழ்ச்சியை நிகழ்த்துவார்கள், அதைத் தொடர்ந்து 'வி ஆர் ஒன்' குழுவைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் 'மிட்டி மே மில் ஜாவா' மற்றும் 'வந்தே மாதரம்' ஆகிய பாடல்களுக்கு நடனமாடவுள்ளனர்.

விளையாட்டு கீதத்துடன்  தொடக்க விழா தொடங்கும் அதே நேரத்தில் 'பாரா விளையாட்டுகளின் பரிணாமம்' என்ற கருப்பொருளில் எல்.ஈ.டி நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்க்க உள்ளது. தொடக்க விழாவிற்காக இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளின் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

'விளையாட்டு மூலம் ஐக்கியம்' நிகழ்ச்சியுடன் இந்தக் கலை நிகழ்ச்சி நிறைவடையும், மேலும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சிறப்பு செய்தியும் இருக்கும்.

கேலோ இந்தியா பாரா விளையாட்டுகளை ஏற்பாடு செய்வதன் பின்னணியில் உள்ள மத்திய அரசின் நோக்கம் அனைத்து பாரா தடகள வீரர்களுக்கும் அதிகாரம் அளிப்பதாகும். உடல் ஊனமுற்றோர் நலனுக்காக அரசு பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்திரா காந்தி ஸ்டேடியம், ஜவஹர் லால் நேரு ஸ்டேடியம், கர்னி சிங் துப்பாக்கி சுடுதல் ரேஞ்ச் ஆகிய மூன்று இடங்களில் முதல் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தடகளம், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, கால்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் ஆகிய 7 பாரா விளையாட்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியாவின் முன்னணி சர்வதேச பாரா நட்சத்திரங்களான ஷீத்தல் தேவி, பவினா படேல், அசோக், பிரமோத் பகத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் மற்றும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகளின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, இப்போது கேலோ இந்தியா பாரா விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

மேலும் கேலோ இந்தியா பாரா விளையாட்டுகள் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்படுவது குறித்து தேசிய தலைநகரில் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழா ஒருங்கிணைப்பின் அடையாளமாகவும், மனித மாண்பைக் கொண்டாடுவதாகவும் இருக்கும்.

----------


ANU/AD/BS/DL


(Release ID: 1984798) Visitor Counter : 103