பிரதமர் அலுவலகம்
பழம்பெரும் கன்னட திரைப்பட நடிகை லீலாவதி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 DEC 2023 9:42PM by PIB Chennai
பழம்பெரும் கன்னட திரைப்பட நடிகை லீலாவதியின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"பழம்பெரும் கன்னட திரைப்பட ஆளுமை லீலாவதி அவர்களின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். திரைப்படத்தின் உண்மையான அடையாளமான அவர், பல படங்களில் தனது பன்முக நடிப்பால் வெள்ளித்திரையில் ஜொலித்தார். அவரது மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க திறமை எப்போதும் நினைவுகூரப்படுவதுடன், பாராட்டப்படும். அன்னாரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி."
----------
ANU/PKV/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1984608)
வருகையாளர் எண்ணிக்கை : 131
இந்த வெளியீட்டை படிக்க:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam