பிரதமர் அலுவலகம்

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

Posted On: 03 DEC 2023 10:01AM by PIB Chennai

இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"நமது வரலாற்றின் முக்கியமான தருணங்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் ஆழ்ந்த ஞானமும், உறுதியான தலைமையும் மிகவும் பெருமைக்குரியவை. ஜனநாயகம் மற்றும் ஒற்றுமையின் பாதுகாவலராக அவரது முயற்சிகள் தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து எதிரொலிக்கின்றன. அன்னாரது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.”

*******

ANU/AD/RB/DL



(Release ID: 1982042) Visitor Counter : 62