பிரதமர் அலுவலகம்

ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து உலகளாவிய பசுமை கடன் முன்முயற்சியை சிஓபி -28 இல் இந்தியா நடத்தியது

Posted On: 01 DEC 2023 8:28PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இணைந்து 2023, டிசம்பர் 1 அன்று துபாயில் சிஓபி -28 இல் 'பசுமை கடன் திட்டம்' குறித்த உயர் மட்ட நிகழ்வை நடத்தினார். 

இந்நிகழ்வில் சுவீடன் பிரதமர் மேதகு திரு. உல்ஃப் கிறிஸ்டர்சன், மொசாம்பிக் அதிபர் மேதகு திரு.பிலிப் நியுசி மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மேதகு சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முன்முயற்சியில் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

பருவநிலை மாற்றத்தின் சவாலுக்கு ஒரு பயனுள்ள எதிர்வினையாக, தன்னார்வ புவிக்கு ஆதரவான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு முறையாக பசுமை கடன் முன்முயற்சி கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது.  தரிசு / சீரழிந்த நிலங்கள் மற்றும் நதி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு பசுமைக் கடன்கள் வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை புதுப்பிக்கவும் மீட்டெடுக்கவும் உதவுகிறது. 

இந்நிகழ்வின் போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் கொள்கைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளின் களஞ்சியமாக செயல்படும் ஒரு வலைத் தளமும் தொடங்கப்பட்டது (https://ggci-world.in/). 

பசுமைக் கடன்கள் போன்ற திட்டங்கள், வழிமுறைகள் மூலம் சுற்றுச்சூழல் நேர்மறையான நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றில் அறிவு, அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் உலகளாவிய ஒத்துழைப்பு, மற்றும் கூட்டாண்மையை எளிதாக்குவதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

******

ANU/AD/BS/DL



(Release ID: 1982019) Visitor Counter : 82