பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்காவில் நடைபெற்ற 16-வது உலக வூஷூ சாம்பியன்பட்டப் போட்டியில் பதக்கம் வென்ற ரோஷிபினா தேவி, குஷால் குமார் மற்றும் சாவி ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2023 10:51AM by PIB Chennai

அமெரிக்காவில் நடைபெற்ற 16வது உலக வூஷூ சாம்பியன் பட்டப் போட்டியில் பதக்கம் வென்ற ரோஷிபினா தேவி, குஷால் குமார், சாவி ஆகியோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

"அமெரிக்காவில் நடைபெற்ற 16 வது உலக வூஷு சாம்பியன் பட்டப் போட்டியில் பதக்கங்களை வென்ற நமது வூஷு சாம்பியன்கள் ரோஷிபினா தேவி, குஷால் குமார், சாவி ஆகியோரை நான் பாராட்டுகிறேன். அவர்களின் மன உறுதியும் திறமையும் உண்மையிலேயே நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. அவர்களின் வெற்றி வூஷூவை இந்தியாவில் மேலும் பிரபலமாக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்."

***

ANU/PVK/SMB/AG/KV


(வெளியீட்டு அடையாள எண்: 1979021) வருகையாளர் எண்ணிக்கை : 192