பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகள், பிராந்திய ஈடுபாடுகள் உலக அரங்கில் அதனை நம்பிக்கையான, திறமையான தேசமாகச் சித்தரிக்கின்றன: பிரதமர்
प्रविष्टि तिथि:
17 NOV 2023 1:43PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் சாதனைகளை கோடிட்டுக் காட்டும் ஒரு கட்டுரையைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில் இந்தியாவின் வெற்றிகரமான ஜி20 தலைமைத்துவம் மற்றும் சந்திரயான் பயணம் ஆகியவைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, கொரோனாவுக்குப் பிந்தைய மீட்சி மற்றும் நாட்டின் வலுவான வளர்ச்சியையும் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இந்தக் கட்டுரையை வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"வெளியுறவுத் துறை அமைச்சரின் @DrSJaishankar கட்டுரை 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக் காட்டுகிறது. இதில் அதன் வெற்றிகரமான ஜி20 தலைமைத்துவம் மற்றும் சந்திரயான் பயணம் ஆகியவை அடங்கும், இது கோவிட் -19 க்கு பிந்தைய மீட்சி மற்றும் வலுவான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறது.
இந்தக் கட்டுரை இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகள், பிராந்திய ஈடுபாடு, உலக அரங்கில் ஒரு நம்பிக்கையான, திறமையான தேசமாக இந்தியாவைச் சித்தரிக்கிறது”.
••••••
ANU/PKV/BS/RR/KV
(रिलीज़ आईडी: 1977594)
आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam