பிரதமர் அலுவலகம்
மவுலானா ஆசாத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர், அவரை நினைவு கூர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2023 9:30AM by PIB Chennai
மவுலானா ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். மௌலானா ஆசாத் ஒரு ஆழ்ந்த அறிஞர் என்றும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் தூணாக இருந்தார் என்றும், கல்விக்கான அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும் திரு. மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் திரு.நரேந்திரமோடி கூறியிருப்பதாவது;
"மவுலானா ஆசாத்தின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். ஆழ்ந்த அறிஞராகவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தூணாகவும் விளங்கிய அவரது கல்வி ஈடுபாடு பாராட்டத்தக்கது. நவீன இந்தியாவை வடிவமைப்பதில் அவரது முயற்சிகள் பலருக்கு தொடர்ந்து வழிகாட்டுகின்றன.”
****
PKV/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1976335)
வருகையாளர் எண்ணிக்கை : 141
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam