குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையத் தலைவர் 'உள்ளூர் குரல்' என்ற கருப்பொருளில் ஐந்து நாள் 'தீபாவளி விழாவை' தொடங்கி வைத்தார்

Posted On: 08 NOV 2023 4:08PM by PIB Chennai

'மன் கி பாத்' நிகழ்ச்சியின் 106-வது பகுதியில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு தருணங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது தலைமையின் கீழ் “உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்” என்ற உணர்வை வலுப்படுத்தும் வகையில், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார் புதுதில்லி, கன்னாட் பிளேஸில் உள்ள கதர் துறை கட்டிடத்தில் ஐந்து நாள் 'தீபாவளி விழாவை' நேற்று தொடங்கி வைத்தார்.

பிரதமரின் வேண்டுகோளுடன் தில்லி மக்களை இணைக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் சாமானிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, 'தீபாவளி விழாவின்போது சிறப்பு அளவிலான உள்ளூர் தயாரிப்புகள் கிடைக்கின்றன. கதர் பொருட்கள் விற்கப்படும்போது, அவை கிராமப்புற இந்தியாவில் பணிபுரியும் கைவினைஞர்களுக்கு பொருளாதார தற்சார்பை வழங்குகின்றன.

நிகழ்ச்சியில் திரு மனோஜ் குமார் பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் கதர் ஆடை அணிபவர்களுக்காக பரந்த அளவிலான உள்ளூர் தயாரிப்புகள் இங்கு கிடைக்கின்றன என்று கூறினார். தில்லியில் மண்பாண்டத் தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் களிமண் விளக்குகள், ரூ.50 முதல் ரூ.1000 வரை விலையுள்ள லட்சுமி, விநாயகர் அழகிய சிலைகள், கைவினைக் களிமண் கோயில்கள், சிறுதானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், மெழுகுவர்த்திகள், அகர்பத்தி, கதர் கைவினைஞர்கள் பல்வேறு நவநாகரீக கதர் ஆடைகள் கிடைக்கின்றன என்று தெரிவித்தார்.

புதுதில்லியின் கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள கதர் கிராமோத்யோக் பவன் கதர் பொருட்களுக்கு 20% வரை தள்ளுபடி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளுக்கு 10% வரை தள்ளுபடி உள்ளிட்ட சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்மாதிரியான தலைமையின் கீழ், "முந்தைய நிதியாண்டில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் பொருட்களின் விற்பனை ரூ.1.34 லட்சம் கோடியைத் தாண்டி வரலாறு படைத்துள்ளது. அதே நேரத்தில், ஒரே நிதியாண்டில் அதிகபட்சமாக 9.54 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது" என்று திரு குமார் கூறினார்.

அக்டோபர் 2, 2023 காந்தி ஜெயந்தி அன்று, புதுதில்லி, கன்னாட் பிளேஸில் உள்ள முதன்மை கதர் பவனில் ரூ.1.52 கோடி மதிப்புள்ள கதர் பொருட்களின் ஒரு நாள் விற்பனை நடைபெற்றது. கோடிக்கணக்கான  கைவினைஞர்கள் வாழ்வாதார வாய்ப்புகளைப் பெறுவதற்காக பண்டிகைகளின் போது உள்நாட்டு கதர் தயாரிப்புகளை வாங்குமாறு அவர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் கதர் கிராமத் தொழில் ஆணைய முதன்மை செயல் அலுவலர் வினித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

****

ANU/PKV/IR/RS/KPG

 



(Release ID: 1975704) Visitor Counter : 100