பிரதமர் அலுவலகம்

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, எனது மண் எனது தேசம் பிரச்சாரத்தின் அமிர்தக் கலச யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

நாடு முழுவதிலுமிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான அமிர்தக் கலச யாத்ரீகர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றுகிறார்

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட அமிர்தத் தோட்டம் மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவு விழாவைக் குறிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெறும்

இளைஞர்களுக்காக ‘மேரா யுவ பாரத்’ (எம்.ஒய்.பாரத்) தளத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

எம்.ஒய்.பாரத், நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு நிலையான முழு அரசு சார்ந்த தளமாக இருக்கும்

Posted On: 30 OCT 2023 9:11AM by PIB Chennai

அக்டோபர் 31, 2023 அன்று மாலை 5 மணியளவில் கடமைப் பாதையில் எனது மண் எனது தேசம் பிரச்சாரத்தின்  அமிர்தக் கலச யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில்

அக்டோபர் 31, 2023 அன்று மாலை 5 மணியளவில் கடமைப் பாதையில் எனது மண் எனது தேசம்  பிரச்சாரத்தின்  அமிர்தக் கலச யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின்  நிறைவு விழாவையும் இந்த நிகழ்ச்சி குறிக்கும்.

இந்நிகழ்ச்சியின் போது  அமிர்தத் தோட்டம் மற்றும்  அமிர்தப் பெருவிழா நினைவிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான  அமிர்தக் கலச யாத்ரீகர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்

இந்த நிகழ்ச்சியின் போது, நாட்டின் இளைஞர்களுக்கான ‘மேரா யுவ பாரத்’-  எனது இளம் இந்தியா (எம்.ஒய்.பாரத்) தளத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

எனது மண் எனது தேசம்:

எனது மண் எனது தேசம் பிரச்சாரம் என்பது, நாட்டிற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அஞ்சலி  செலுத்தும் முன்முயற்சி ஆகும். மக்களின் பங்கேற்பு என்ற உணர்வில், இந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் பஞ்சாயத்து / கிராமம், வட்டாரம், நகர்ப்புற உள்ளாட்சி, மாநில மற்றும் தேசிய மட்டங்களில் நடத்தப்படும் பல நடவடிக்கைகள் மற்றும் விழாக்களை உள்ளடக்கியுள்ளது. உன்னதத் தியாகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் வகையில்,  நினைவகம் கட்டுதல்;  நினைவகத்தில் மக்கள் எடுத்த ஐந்து உறுதிமொழிகள்’; உள்நாட்டு இனங்களின் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் ‘ அமிர்தத் தோட்டம்’ (வசுதா வந்தன்) உருவாக்குதல் மற்றும் சுதந்திரப்  போராட்ட வீரர்கள் மற்றும்  மறைந்த சுதந்திரப்  போராட்ட வீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் பாராட்டு விழாக்கள் ஆகிய  நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 2.3 லட்சத்துக்கும் மேற்பட்ட  நினைவகங்கள் கட்டப்பட்டதன் மூலம் இந்தப் பிரச்சாரம் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது; கிட்டத்தட்ட 4 கோடி, ஐந்து  உறுதிமொழி சுய புகைப்படங்கள் பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளன; சுதந்திரப்  போராட்ட வீரர்கள் மற்றும்  மறைந்த சுதந்திரப்  போராட்ட வீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் வகையில் நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான பாராட்டு விழாக்கள்  நடத்தப்பட்டுள்ளன; 2.36 கோடிக்கும் அதிகமான உள்நாட்டு இனங்களின் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன;  நாடு முழுவதும் வசுதா வந்தன் கருப்பொருளின் கீழ் 2.63 லட்சம் அமிர்தத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

‘எனது மண் எனது தேசம்’ பிரச்சாரத்தில்  அமிர்தக் கலச யாத்திரையும் அடங்கும்.  இதில் கிராமப்புறங்களில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், நகர்ப்புறங்களில் உள்ள வார்டுகளிலிருந்தும் மண் மற்றும் தானியங்களை சேகரிப்பதும் அடங்கும், இது வட்டார மட்டத்திற்கு அனுப்பப்படுகிறது (வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் மண்ணும் கலக்கப்படுகிறது) பின்னர் மாநிலத் தலைநகருக்கு அனுப்பப்படுகிறது. ஆயிரக்கணக்கான அமிர்த கலச யாத்ரீகர்களுடன் மாநில அளவில் இருந்து மண் தேசிய தலைநகருக்கு அனுப்பப்படும்.

அக்டோபர் 30, 2023 அன்று, அமிர்த கலச யாத்திரையில், அந்தந்த வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால்  பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தங்கள் கலசத்திலிருந்து மண்ணை ஒரு பெரிய அமிர்தக் கலசத்தில் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வில் வைப்பார்கள்.  அக்டோபர் 31-ஆம் தேதி, நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான அமிர்தக் கலச  யாத்ரீகர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றுவார்.

பிரதமரால் அடிக்கல் நாட்டப்படவுள்ள  அமிர்தத் தோட்டம், அமிர்தப் பெருவிழா   நினைவகம் ஆகியவை, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து கடமைப்பாதையில் கட்டப்படும்.

‘விடுதலையின் அமிர்தப் பெருவிழா’ நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக  எனது மண் எனது தேசம் பிரச்சாரம் திட்டமிடப்பட்டது. இந்திய  சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாட  விடுதலையின் அமிர்தப் பெருவிழா, மார்ச் 12, 2021 அன்று தொடங்கியது. அதன் பின்னர் நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பொதுமக்களின் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டன.

எம்.ஒய்.பாரத்:
மேரா யுவ பாரத்-  எனது இளைய பாரதம் (எம்.ஒய்.பாரத்) ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டு, நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு முழு  அரசின் தளமாகச் செயல்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப்  பார்வைக்கு ஏற்ப, எனது இளைய பாரதம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசின் முழு நிலையிலும் ஒரு சாத்தியமான பொறிமுறையை வழங்கும், இதனால் அவர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றவும், ‘வளர்ந்த இந்தியாவைக்’ கட்டமைப்பதில் பங்களிக்கவும் முடியும். இளைஞர்களை சமூக மாற்றத்தின் முகவர்களாகவும், தேசத்தை உருவாக்குபவர்களாகவும் மாற்ற ஊக்குவிப்பதும், அரசிற்கும், குடிமக்களுக்கும் இடையிலான ‘இளைஞர் பாலமாக’ செயல்பட உதவுவதும் எனது இளைய பாரதம் திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில், ‘எனது இளைய பாரதம்’, நாட்டின் 'இளைஞர் தலைமையிலான வளர்ச்சிக்கு' ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

(வெளியீட்டு ஐடி: 1972907)

பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவு விழாவையும் இந்த நிகழ்ச்சி குறிக்கும்.

இந்நிகழ்ச்சியின் போது  அமிர்தத் தோட்டம் மற்றும்  அமிர்தப் பெருவிழா நினைவிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான அமிர்தக் கலச யாத்ரீகர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்

இந்த நிகழ்ச்சியின் போது, நாட்டின் இளைஞர்களுக்கான 'மேரா யுவ பாரத்’-  எனது இளம் இந்தியா ( மை பாரத்) தளத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

எனது மண் எனது தேசம்

எனது மண் எனது தேசம் பிரச்சாரம் என்பது, நாட்டிற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அஞ்சலி  செலுத்தும் முன்முயற்சி ஆகும். மக்களின் பங்கேற்பு என்ற உணர்வில், இந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் பஞ்சாயத்து / கிராமம், வட்டாரம், நகர்ப்புற உள்ளாட்சி, மாநில மற்றும் தேசிய மட்டங்களில் நடத்தப்படும் பல நடவடிக்கைகள் மற்றும் விழாக்களை உள்ளடக்கியுள்ளது. உன்னதத் தியாகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் வகையில்நினைவகம் கட்டுதல்நினைவகத்தில் மக்கள் எடுத்த ஐந்து உறுதிமொழிகள்'; உள்நாட்டு இனங்களின் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் ' அமிர்தத் தோட்டம்' (வசுதா வந்தன்) உருவாக்குதல் மற்றும் சுதந்திரப்  போராட்ட வீரர்கள் மற்றும்  மறைந்த சுதந்திரப்  போராட்ட வீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் பாராட்டு விழாக்கள் ஆகிய  நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 2.3 லட்சத்துக்கும் மேற்பட்ட  நினைவகங்கள் கட்டப்பட்டதன் மூலம் இந்தப் பிரச்சாரம் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது; கிட்டத்தட்ட 4 கோடி, ஐந்து  உறுதிமொழி சுய புகைப்படங்கள் பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளன; சுதந்திரப்  போராட்ட வீரர்கள் மற்றும்  மறைந்த சுதந்திரப்  போராட்ட வீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் வகையில் நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான பாராட்டு விழாக்கள்  நடத்தப்பட்டுள்ளன; 2.36 கோடிக்கும் அதிகமான உள்நாட்டு இனங்களின் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளனநாடு முழுவதும் வசுதா வந்தன் கருப்பொருளின் கீழ் 2.63 லட்சம் அமிர்தத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

'எனது மண் எனது தேசம்' பிரச்சாரத்தில்  அமிர்தக் கலச யாத்திரையும் அடங்கும்இதில் கிராமப்புறங்களில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், நகர்ப்புறங்களில் உள்ள வார்டுகளிலிருந்தும் மண் மற்றும் தானியங்களை சேகரிப்பதும் அடங்கும், இது வட்டார மட்டத்திற்கு அனுப்பப்படுகிறது (வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் மண்ணும் கலக்கப்படுகிறது) பின்னர் மாநிலத் தலைநகருக்கு அனுப்பப்படுகிறது. ஆயிரக்கணக்கான அமிர்த கலச யாத்ரீகர்களுடன் மாநில அளவில் இருந்து மண் தேசிய தலைநகருக்கு அனுப்பப்படும்.

அக்டோபர் 30, 2023 அன்று, அமிர்த கலச யாத்திரையில், அந்தந்த வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால்  பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தங்கள் கலசத்திலிருந்து மண்ணை ஒரு பெரிய அமிர்தக் கலசத்தில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வில் வைப்பார்கள்அக்டோபர் 31-ஆம் தேதி, நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான அமிர்தக் கலச  யாத்ரீகர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றுவார்.

பிரதமரால் திறந்து வைக்கப்படும்  அமிர்தத் தோட்டம், அமிர்தப் பெருவிழா   நினைவகம் ஆகியவை , நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து கடமைப்பாதையில் கட்டப்பட்டுள்ளன

'விடுதலையின் அமிர்தப் பெருவிழாநிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக  எனது மண் எனது தேசம் பிரச்சாரம் திட்டமிடப்பட்டது. இந்திய  சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாட  விடுதலையின் அமிர்தப் பெருவிழா மார்ச் 12, 2021 அன்று தொடங்கியது. அதன் பின்னர் நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பொதுமக்களின் ஆர்வமுடன் ஏற்பாடு செய்யப்பட்டன.

என் பாரத்

மேரா யுவ பாரத்எனது இளம் இந்தியா (எம்.ஒய்.பாரத்) ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டு, நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு முழு  அரசின் தளமாகச் செயல்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப்  பார்வைக்கு ஏற்ப, மை பாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசின் முழு நிலையிலும் ஒரு சாத்தியமான பொறிமுறையை வழங்கும், இதனால் அவர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றவும், 'வளர்ந்த இந்தியாவைக்' கட்டமைப்பதில் பங்களிக்கவும் முடியும். இளைஞர்களை சமூக மாற்ற முகவர்களாகவும், தேசத்தை உருவாக்குபவர்களாகவும் மாற்ற ஊக்குவிப்பதும், அரசிற்கும், குடிமக்களுக்கும் இடையிலான 'இளைஞர் பாலமாகசெயல்பட உதவுவதும் மை பாரத் திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில், 'மை பாரத்', நாட்டின் 'இளைஞர் தலைமையிலான வளர்ச்சிக்கு' ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

----

ANU/PKV/BR/KPG



(Release ID: 1972980) Visitor Counter : 126