பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அக்டோபர் 27-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட் செல்கிறார் பிரதமர்

ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார்

ரகுபீர் மந்திரில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார் பிரதமர்

மறைந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு பிறந்த ஆண்டு விழாவைக் குறிக்கும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

துளசி பீடத்தையும் பிரதமர் பார்வையிடுகிறார்; காஞ்ச் மந்திரில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார்

Posted On: 26 OCT 2023 8:02PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 அக்டோபர் 27 அன்று மத்தியப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

பிற்பகல் 1.45 மணியளவில், சத்னா மாவட்டத்தின் சித்ரகூட் செல்லும் பிரதமர், ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளை சார்பில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ரகுபீர் மந்திரில் அவர் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். ஸ்ரீ ராம் சமஸ்கிருத மகாவித்யாலயாவுக்கும் அவர் செல்லவுள்ளார். மறைந்த அரவிந்த் பாய் மஃபத்லாலின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்துவதோடு, ஜானகிகுண்ட் சிகித்சாலயாவின் புதிய பிரிவையும் திறந்து வைக்கிறார்.

மறைந்த அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் பொது நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்கிறார்.  ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளை 1968 ஆம் ஆண்டில் பரம் பூஜ்ய ரஞ்சோதாஸ்ஜி மகராஜால் நிறுவப்பட்டது. ஸ்ரீ அரவிந்த் பாய் மஃபத்லால், பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜால் ஈர்க்கப்பட்டு அறக்கட்டளையை நிறுவுவதில்  முக்கிய பங்கு வகித்தார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோர்களில் ஒருவரான திரு அரவிந்த் பாய் மஃபத்லால், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார்.

சித்ரகூட் பயணத்தின் போது, துளசி பீடத்தையும் பிரதமர் பார்வையிடுகிறார். பிற்பகல் 3:15 மணியளவில், காஞ்ச் மந்திரில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார்.  துளசி பீடத்தின் ஜகத்குரு ராமானந்தாச்சாரியாவிடம் ஆசீர்வாதம் பெறுகிறார். ஒரு பொது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார், அங்கு 'அஷ்டாத்யாயி பாஷ்யா', 'ராமானந்தாச்சாரியா சரிதம்' மற்றும் 'பகவான் ஸ்ரீ கிருஷ்ணா கி ராஷ்டிரலீலா' ஆகிய மூன்று புத்தகங்களைப் பிரதமர் வெளியிடுகிறார்.

துளசி பீடம் மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூடில் உள்ள ஒரு முக்கியமான மத மற்றும் சமூக சேவை நிறுவனமாகும். இது 1987 ஆம் ஆண்டில் ஜகத்குரு ராமபத்ராச்சாரியாரால் நிறுவப்பட்டது. துளசி பீடம், இந்து சமயம் தொடர்பான நூல்களின் முன்னணி வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.  

***


Release ID=1971676



(Release ID: 1972780) Visitor Counter : 106