உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் இன்று நடைபெற்ற 75-வது ஆர்ஆர் தொகுப்பு ஐபிஎஸ் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

Posted On: 27 OCT 2023 3:05PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் இன்று (27.10.2023) நடைபெற்ற 75-வது ஆர்.ஆர் தொகுப்பு ஐபிஎஸ் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு  அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர்மத்திய உள்துறை செயலாளர்உளவுத் துறை இயக்குநர்சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திரு அமித் ஷா பேசுகையில், 75-வது ஆர் ஆர் தொகுப்பு பயிற்சி அதிகாரிகளுக்கு இன்று மிகவும் முக்கியமான நாள் என்று கூறினார். நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டின் போது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பின் பொறுப்பு அவர்களின் கைகளில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.  

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அமிர்தகால தீர்மானத்தை நிறைவேற்றும் திசையில் 75 ஆர்ஆர் தொகுப்பு பயிற்சி அதிகாரிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார்.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல சர்தார் படேல் மிகவும் சிந்தனையுடன் இந்த அகாடமிக்கு அடித்தளம் அமைத்தார் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்து அமிர்தகால காலத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு  அவற்றைச் சாதனைகளாக மாற்ற  பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பூடான்மாலத்தீவுமொரீஷியஸ்நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 175 பேர் அடிப்படை படிப்பை முடித்துவிட்டு இன்று இங்கிருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அமைச்சர்  தெரிவித்தார். இந்த 175 பேரில் 34 பேர் பெண் அதிகாரிகள் என்று அவர் கூறினார்.

வரும் நாட்களில் உள்நாட்டு பாதுகாப்பைக் கையாள்வதில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய காவல்துறையை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உலகிலேயே மிகவும் சிறந்ததாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.  

இன்று ஒரு பெண் அதிகாரி சிறந்த பயிற்சி அதிகாரிக்கான விருதைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக திரு அமித் ஷா தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ்பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக மோடி அரசு சமீபத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதம்இடதுசாரி தீவிரவாதம் மற்றும் நக்லைட் வன்முறை போன்ற சவால்களை நாடு நீண்ட காலமாக எதிர்கொண்டு வருவதாகவும்ஆனால் கடந்த 10 ஆண்டுகளில்நமது துணிச்சலான காவல்துறையினரின் முயற்சியால்அவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கிடைத்துள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.

நமது சவால்கள் இன்னும் முடிவடையவில்லை என்று கூறிய அவர், திட்டமிட்ட குற்றங்கள், இணையதள குற்றங்கள்மாநிலங்களுக்கு இடையிலான குற்றங்கள், சர்வதேச நிதி மோசடிகளில் போன்ற பல புதிய சவால்கள் இன்று நம் முன் நிற்கின்றன என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் கடத்தல்கிரிப்டோ கரன்சி, ஹவாலா வர்த்தகம் போன்ற சவால்களுக்கு எதிராக அதே வீரியத்துடன் நாம் போராட வேண்டும் என்று அவர் கூறினார்.

நாட்டின் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்களாக காவல் துறை அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும் என்று திரு அமித்ஷா கேட்டுக்கொண்டார். பணியமர்த்தப்படும் இடத்தின் உள்ளூர் மொழிபாரம்பரியம் மற்றும் வரலாற்றை மதித்து, அந்த மக்களின்  உணர்வைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த ஆண்டுகளில்  உள்நாட்டு பாதுகாப்பு பெரிய அளவில் மேம்பட்டுள்ளது என்று அவர் கூறினார். வடகிழக்கு மாநிலங்கள், இடதுசாரி தீவிரவாத பகுதிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய நாட்டின் மூன்று முக்கியப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமையை  மேம்படுத்துவதில் அரசு மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிப்பதாக அவர் கூறினார். தரவுத்தளங்கள் மற்றும் பகுப்பாய்வு கருவிகளின் துணையுடன் பணியாற்றுமாறும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துமாறும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். 

***


ANU/PKV/PLM/RS/KPG


(Release ID: 1972116) Visitor Counter : 132