பிரதமர் அலுவலகம்
நினைவுப் பரிசுகளை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க மக்களை பிரதமர் ஊக்குவிக்கிறார்
प्रविष्टि तिथि:
27 OCT 2023 1:54PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தமக்குக் கிடைத்த நினைவுப் பரிசுகளை ஏலம் விடும் நடைமுறையின் போது, மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தூய்மை கங்கை இயக்கத்திற்கு வழங்கப்படுவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பல ஆண்டுகளாக எனக்குக் கிடைத்த நினைவுப் பரிசுகளை ஏலம் விடுவதில் கிடைத்துள்ள அமோக வரவேற்பால் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தூய்மை கங்கை இயக்கத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் பெற்ற நினைவுப் பரிசுகளில் சிலவற்றை பெற அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். pmmementos.gov.in/#/ "
***
ANU/PKV/PLM/RS/KPG
(रिलीज़ आईडी: 1972079)
आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam