பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டு செஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஹிமான்ஷி ரதிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 26 OCT 2023 9:26PM by PIB Chennai

ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் தனிநபர் தரம் 6-பி 1 ஆர்என்டி7 சதுரங்கப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷி ரதிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் தனிநபர் தரநிலை 6-பி 1 ஆர்.என்.டி.7- செஸ் போட்டியில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய ஹிமான்ஷி ரதிக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பு மற்றும் உத்திபூர்வ திறமை அவருக்கு நன்கு தகுதியான வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது. வரும் காலங்களில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெறட்டும்."

***

 

ANU/PKV/SMB/AG/KPG

 


(रिलीज़ आईडी: 1971918) आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam