பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் மாநிலத்தின் ஜம்ரானி அணை பன்னோக்குத் திட்டத்தைப் பிரதமரின் வேளாண் பாசனத் திட்டம் -விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைத் திட்டத்தின் (பி.எம்.கே.எஸ்.ஒய்-ஏ.ஐ.பி.பி) கீழ் சேர்க்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Posted On: 25 OCT 2023 3:18PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலத்தின் ஜம்ரானி அணை பன்னோக்குத் திட்டத்தை நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின்  பிரதமரின் வேளாண் பாசனத் திட்டம் - விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைத் திட்டத்தின் (பி.எம்.கே.எஸ்.ஒய்-..பி.பி) கீழ் சேர்க்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 

ரூ.2,584.10 கோடி மதிப்பீட்டில் 2028 மார்ச் மாதத்திற்குள் இத்திட்டத்தை முடிக்க உத்தராகண்ட் மாநிலத்திற்கு ரூ.1,557.18 கோடி மத்திய அரசின் நிதியுதவிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்த திட்டத்தின் மூலம் உத்தராகண்டின் நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் மாவட்டங்கள் மற்றும் உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மற்றும் பரேலி மாவட்டங்களில் 57,065 ஹெக்டேர் (உத்தராகண்டில் 9,458 ஹெக்டேர் மற்றும் உத்தரபிரதேசத்தில் 47,607 ஹெக்டேர்) கூடுதல் நீர்ப்பாசனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 14 மெகாவாட் நீர் மின் உற்பத்தியையும், 10.65 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயனடையும் ஹல்த்வானி மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு 42.70 மில்லியன் கன மீட்டர் (எம்.சி.எம்) குடிநீர் வழங்குவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

*******  

 

AD/SMB/KRS


(Release ID: 1970880) Visitor Counter : 188