பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் பவினா படேல் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 OCT 2023 1:29PM by PIB Chennai
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் மற்றும் தரம் 4 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பவினா படேலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ஓர் உண்மையான உத்வேகம்! டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் - கிளாஸ் 4 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பவினா படேலுக்கு வாழ்த்துகள். அவரது அசாதாரண திறமையும், உறுதியான அர்ப்பணிப்பும் நமது தேசத்திற்கு மகத்தான பெருமையை அளித்துள்ளது."
******
AD/SMB/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1970792)
வருகையாளர் எண்ணிக்கை : 134
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada