உள்துறை அமைச்சகம்
'காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு' மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா காவல்துறை தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்
Posted On:
21 OCT 2023 2:01PM by PIB Chennai
'காவலர் நினைவு தினத்தை' முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா இன்று புதுதில்லியில் உள்ள தேசிய காவல் நினைவகத்தில் காவல்துறை தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த 36,250 காவலர்களுக்கு திரு ஷா தனது உரையில் அஞ்சலி செலுத்தினார்.
இன்று உலகின் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருவதாகவும், அவர்களின் குடும்பங்களின் தியாகிகளின் தியாகமே அதன் அடித்தளம் என்றும், அவர்களின் தியாகத்தை இந்த நாடு ஒருபோதும் மறக்காது என்றும் அவர் வீரமரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினரிடம் கூறினார்.
விழிப்புடன் கூடிய போலீஸ் அமைப்பு இல்லாமல் எந்தவொரு நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பும் அல்லது எல்லைப் பாதுகாப்பும் சாத்தியமில்லை என்று திரு ஷா கூறினார். நாட்டுக்கு சேவையாற்றும் காவலர்களில், இரவு, குளிர்காலம் அல்லது கோடைகாலம், பண்டிகை அல்லது வழக்கமான நாள் என்றெல்லாம் பாராமல் கடினமான பணியில் ஈடுபடுகின்றனர் என்று அவர் கூறினார்.
போலீசாருக்கு குடும்பத்துடன் பண்டிகைகளை கொண்டாட வாய்ப்பு கிடைப்பதில்லை. நமது அனைத்து காவல்துறையினரும் தங்கள் குடும்பங்களிலிருந்து விலகி தங்கள் வாழ்க்கையின் பொற்காலங்களை நாட்டின் எல்லையில் செலவிடுகிறார்கள், மேலும் தங்கள் தைரியம் மற்றும் தியாகங்கள் மூலம் நாட்டைப் பாதுகாக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவது, குற்றங்களைத் தடுப்பது, கூட்டத்தை எதிர்கொள்ளும் போது சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, பேரழிவுகள் மற்றும் விபத்துகளின் போது சாதாரண குடிமக்களைப் பாதுகாப்பது அல்லது கொரோனா காலம் போன்ற கடினமான காலங்களில் முன்களத்தில் இருப்பது, குடிமக்களைப் பாதுகாப்பது என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது காவல்துறையினர் தங்களை நிரூபித்துள்ளனர் என்று திரு ஷா கூறினார்.
கடந்த ஒரு வருடத்தில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் பணியில் இருந்த 188 காவலர்கள் உச்சபட்ச தியாகம் செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவலர் நினைவிடம் என்பது வெறுமனே அடையாளமாக மட்டுமல்லாமல், தேசத்தைக் கட்டமைப்பதில் நமது காவல்துறையினரின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புகளுக்கான அங்கீகாரமாகும் என்று திரு அமித் ஷா கூறினார். காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனில் அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1969668
***
ANU/AD/BS/DL
(Release ID: 1969725)
Visitor Counter : 152