பிரதமர் அலுவலகம்

உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக வெற்றி பெற்ற கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 19 OCT 2023 6:27PM by PIB Chennai

கத்தார் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக வெற்றி பெற்ற கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"கத்தார் மாஸ்டர்ஸ் 2023 இல் சிறந்து விளங்கிய @KarthikeyanM64 வாழ்த்துகள்! அவரது வெற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

நடப்பு செஸ் சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 

அற்புதமான பணியை அவர் தொடரட்டும், அடுத்த சுற்று சிறப்பாக அமைய அவருக்கு வாழ்த்துகள்."

----

(Release ID: 1969154)

ANU/AD/IR/KPG/KRS



(Release ID: 1969187) Visitor Counter : 102