பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் முதலாவது பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து முறையை பிரதமர் அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார்


தில்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தட முனையத்தின் முன்னுரிமைப் பிரிவை பிரதமர் தொடங்கி வைக்கிறார்; சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையுடன் இணைக்கும் ரேபிட்எக்ஸ் ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்

நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து முறை, உலகின் சிறந்தவற்றுடன் ஒப்பிடக்கூடிய ஒரு அதிநவீன பிராந்திய போக்குவரத்துத் தீர்வாகும்

பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து முறை மேம்பாடு பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும்; வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதார வாய்ப்புகளுக்கு மேம்பட்ட அணுகுமுறையை அளிக்கும்; காற்று மாசுபாட்டை கணிசமாகக் குறைக்க உதவுகிறது

பிரதமரின் அதிவிரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு இணங்க, ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், பேருந்து சேவைகள் போன்றவற்றுடன் விரிவான பன்முக ஒருங்கிணைப்பை பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து முறை கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

பெங்களூரு மெட்ரோவின் கிழக்கு மேற்கு முனையத்தின் இரு பகுதிகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

Posted On: 18 OCT 2023 4:23PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 20 ஆம் தேதி காலை 11:15 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் சாஹிபாபாத் ரேபிட்எக்ஸ் நிலையத்தில் டெல்லி காசியாபாத் - மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  வழித்தட முனையத்தின்  முன்னுரிமைப் பிரிவைத் தொடங்கி வைக்கிறார்.  இந்தியாவில் பிராந்திய அதிவிரைவுப் போக்குவரத்து முறை தொடங்குவதைக் குறிக்கும் வகையில், சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையுடன் இணைக்கும் ரேபிட்எக்ஸ் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில், சாஹிபாபாத்தில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு பிரதமர் தலைமை தாங்குகிறார், அங்கு நாட்டில் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  தொடங்கப்படுவதை முன்னிட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். மேலும், பெங்களூரு மெட்ரோவின் கிழக்கு மேற்கு முனையத்தின் இரண்டு பகுதிகளையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

தில்லி - காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  வழித்தட  முனையம்

தில்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தட   முனையத்தின்  17 கிலோ மீட்டர் தொலைவிலான  முன்னுரிமைப் பிரிவு தொடங்கப்படும். இது காசியாபாத், குல்தார் மற்றும் துஹாய் நிலையங்கள் வழியே  சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையை இணைக்கும். தில்லி காசியாபாத் - மீரட் வழித்தடத்திற்கு 2019 மார்ச் 8-ம் தேதி பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

புதிய உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பிராந்திய இணைப்பை மாற்றுவதற்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, பிராந்திய அதி விரைவு போக்குவரத்து முறை திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது புதிய ரயில் அடிப்படையிலான, மிதமான அதிவேக, அதிக அதிர்வெண் பயணிகள் போக்குவரத்து அமைப்பாகும்.

மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகம் என்ற வடிவமைப்புடன், பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை என்பது ஒரு மாற்று பிராந்திய மேம்பாட்டு முயற்சியாகும். இது நகரத்திற்குள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அதிவேக ரயில்களை இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தேவைக்கேற்ப ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் சேவை என்ற நிலைய எட்டமுடியும்.

தில்லியில் மொத்தம் எட்டு பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  முனையங்களை உருவாக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் தில்லி - காசியாபாத் - மீரட் முனையங்கள் உட்பட மூன்று வழித்தடங்கள் முதல் கட்டத்தில் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன; தில்லி - குருகிராம் -எஸ்.என்.பி ஆல்வார் முனையம், மற்றும் தில்லி - பானிபட் முனையம். தில்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  முனையம்  ரூ.30,000 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்படுகிறது. மேலும் காசியாபாத், முராத்நகர் மற்றும் மோடிநகர் ஆகிய நகர்ப்புற மையங்கள் வழியாக செல்லும் பயண நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்தில் தில்லியையும் மீரட்டையும் இணைக்கும்.

பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  முனையம் நாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஒரு அதிநவீன பிராந்திய போக்குவரத்து தீர்வாகும். மேலும் இது உலகின் சிறந்தவற்றுடன் ஒப்பிடத்தக்கது. இது நாட்டில் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நவீன நகரங்களுக்கு இடையிலான பயணத் தீர்வுகளை வழங்கும். பிரதமர் அதிவிரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு இணங்க, பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  கட்டமைப்பு ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், பேருந்து சேவைகள் போன்றவற்றுடன் விரிவான பன்முக ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்கும். இத்தகைய மாற்றமான பிராந்திய நகர்வு தீர்வுகள் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும்; வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதார வாய்ப்புகளுக்கு மேம்பட்ட அணுகுமுறையை வழங்குதல் வாகன நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை கணிசமாகக் குறைக்க உதவுகிறது.

பெங்களூரு மெட்ரோ

பிரதமரால் நாட்டுக்கு முறைப்படி அர்ப்பணிக்கப்படும் இரண்டு மெட்ரோ பாதைகள் பையப்பனஹள்ளி- கிருஷ்ணராஜபுரா மற்றும் கெங்கேரி முதல் சல்லகட்டா வரை இணைக்கின்றன. முறையான தொடக்க நிகழ்ச்சிக்காக காத்திருக்காமல், இந்த முனையத்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு வசதியாக இந்த இரண்டு மெட்ரோ வழித்தடங்களும் 2023 அக்டோபர் 9 முதல் பொது சேவைக்கு திறக்கப்பட்டன.

***

 

ANU/PKV/IR/RS/KPG


(Release ID: 1968875) Visitor Counter : 264