பிரதமர் அலுவலகம்
என்.எஸ்.ஜி. உருவாக்க தினத்தையொட்டி அதன் வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
16 OCT 2023 3:47PM by PIB Chennai
தேசிய பாதுகாப்புப் படை (என் எஸ் ஜி) வீரர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் படையின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் இந்தத் தருணத்தில் பாராட்டுகளைத் தெரிவிப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். அவர்கள் தங்கள் கடமையில் சோர்வில்லாத தொழில்முறையையும், நமது தேசத்தின் மீது ஆழ்ந்த அன்பையும், அசைக்க முடியாத துணிச்சலையும் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
"அனைத்து என்.எஸ்.ஜி வீரர்களுக்கும், அந்தப்படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள்.
என்.எஸ்ஜி கருப்புப்பூனைப் படையினர் (@nsgblackcats) தங்களைத் தனித்துவமான சக்தியாக உறுதியாக நிலைநிறுத்தி, பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த சிறப்புத் தருணத்தில், படையின் அனைத்துத் துணிச்சலான வீரர்களையும் நான் பாராட்டுகிறேன். அவர்கள் தங்கள் கடமையின் போது, சோர்வில்லாத தொழில்முறையையும், நம் தேசத்தின் மீது ஆழ்ந்த அன்பையும், அசைக்க முடியாத துணிச்சலையும் வெளிப்படுத்துகின்றனர்.”
***
SMB/ANU/PLM/RS/KPG
(रिलीज़ आईडी: 1968171)
आगंतुक पटल : 162
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam