பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பார்வதி குண்ட், ஜகேஷ்வர் கோயில்களில் தரிசனம் மேற்கொண்டது சிறப்பு வாய்ந்த தருணம்: பிரதமர்

Posted On: 14 OCT 2023 11:52AM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் பகுதியில் உள்ள பார்வதி குண்ட் மற்றும் ஜகேஷ்வர் கோயில்களை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக பிரதமர் திரு. நரேந்திர மோடி பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

"உத்தராகண்டில் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஒன்று இருந்தால், அது எந்த இடமாக இருக்கும் என்று யாராவது என்னிடம் கேட்டால், மாநிலத்தின் குமாவுன் பகுதியில் உள்ள பார்வதி குண்ட் மற்றும் ஜகேஷ்வர் கோயில்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று நான் சொல்வேன். இயற்கை அழகும் தெய்வீகத்தன்மையும் அங்கு உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

நிச்சயமாக, உத்தரகாண்ட் மாநிலம் பார்க்க வேண்டிய பிரபலமான பல பாரம்பரியமான இடங்களைக் கொண்டுள்ளது, மேலும் நான் அடிக்கடி இந்த  மாநிலத்திற்கு வருகை தந்துள்ளேன். இதில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய புனித இடங்களும் அடங்கும், அவை மிகவும் மறக்கமுடியாத அனுபவங்களாகும். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்வதி குண்ட் மற்றும் ஜகேஷ்வர் கோயில்களுக்கு மீண்டும் வருவது சிறப்பு வாய்ந்த தருணமாகும்".

***

ANU/AD/BS/DL


(Release ID: 1967628) Visitor Counter : 111