பிரதமர் அலுவலகம்

ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற எச்.எஸ். பிரணாய்-க்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 06 OCT 2023 6:13PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற எச்.எஸ். பிரணாய்க்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற எச்.எஸ். பிரணாய் @PRANNOYHSPRI சாதனையால் மகிழ்ச்சியடைகிறேன். அவரது அசைக்க முடியாத உறுதியும், விடாமுயற்சியும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்குப் பாடங்கள்.

அற்புதம், பிரணாய்! இந்த வெற்றியை நாடே கொண்டாடுகிறது.

***

(Release ID: 1965096)

ANU/SM/SMB/KPG/KRS



(Release ID: 1965156) Visitor Counter : 81