பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மகளிர் ஸ்குவாஷ் அணிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2023 8:09PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற மகளிர் ஸ்குவாஷ் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். இந்த சாதனைக்காக தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, அனஹத் சிங் மற்றும் தன்வி ஆகியோருக்கு திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியுள்ளதாவது; 

 

 "ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது மகளிர் ஸ்குவாஷ் அணி வெண்கலப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. @DipikaPallikal, @joshnachinappa, @Anahat_Singh13, தன்வி ஆகியோரை பாராட்டுகிறேன். அவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

*****

AD/ANU/PKV/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1962279) வருகையாளர் எண்ணிக்கை : 127