இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2023 2:18PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி (2022) டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி ஜோடிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது ;
"பெரிய செய்தி. நமது டென்னிஸ் வீரர்களுக்கு நன்றி. ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நமது ஆடவர் இரட்டையர் ஜோடியான ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனிக்கு வாழ்த்துகள். அவர்களின் சிறப்பான குழுப்பணி நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் வரவிருக்கும் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”
***
ANU/AD/PKV/KPG