பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 இல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவில் மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2023 10:07AM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திவ்யா தாடிகோல், இஷா சிங் மற்றும் பாலக் ஆகியோரின் மகளிர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவு வருமாறு:
"ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் மற்றொரு பதக்கம்!
10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் குழு பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திவ்யா தாடிகோல், இஷா சிங் மற்றும் பாலக் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் வெற்றி பல விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்"
-----
ANU/AD/PKV/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1961999)
வருகையாளர் எண்ணிக்கை : 132
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam