பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 26 SEP 2023 6:15PM by PIB Chennai

தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப்பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"வஹீதா ரஹ்மான் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய சினிமாவில் அவரது பயணம் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது. திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கருணையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் அவர், நமது சினிமா பாரம்பரியத்தின் மிகச் சிறந்த நபர் ஆவார். அவருக்கு வாழ்த்துகள்.

 

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

***

(Release ID: 1960980)

AP/ANU/PLM/RS/KRS


(रिलीज़ आईडी: 1961053) आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam