பிரதமர் அலுவலகம்
ஐஎல்சிஏ 4 பிரிவு மகளிர் டிங்கி படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நேஹா தாக்கூருக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
26 SEP 2023 6:02PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான டிங்கி - ஐஎல்சிஏ 4 பிரிவு படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நேஹா தாக்கூருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு!
பெண்கள் டிங்கி - ஐஎல்சிஏ 4 பிரிவு படகுப் போட்டியில் நேஹா தாக்கூர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அவரது அசாதாரண செயல்பாடு, அவரது திறமை மற்றும் கடின உழைப்புக்கு இது ஒரு சான்றாகும். அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்."
இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1960967)
AP/ANU/PLM/RS/KRS
(Release ID: 1961051)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam