பிரதமர் அலுவலகம்
கோவாவின் அகுவாடா கோட்டையில் இந்திய கலங்கரை விளக்கத் திருவிழாவைத் தொடங்கி வைத்ததில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்
Posted On:
24 SEP 2023 10:32PM by PIB Chennai
கலங்கரை விளக்கங்கள் முக்கிய சுற்றுலாத் தலங்களாக வளர்ந்து வருவதைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
கோவாவின் அகுவாடா கோட்டையில் முதல் இந்திய கலங்கரை விளக்கத் திருவிழாவை கோவா முதல்வர் திரு பிரமோத் பி சாவந்த் மற்றும் மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபத் ஒய் நாயக் ஆகியோருடன் இணைந்து தொடங்கி வைத்ததாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் தொடர் பதிவுகளின் வாயிலாகத் தெரிவித்தார்.
கடல்வழிப் போக்குவரத்தின் இன்றியமையாத அங்கமான கலங்கரை விளக்கங்கள் மற்றும் பழங்காலம் முழுவதும் கப்பல்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அவற்றின் மர்மம் மற்றும் இயற்கை வசீகரத்தால் கவர்ந்த தனித்துவமான கட்டமைப்புகளைக் கொண்டாடும் வகையில் இந்திய கலங்கரை விளக்கத் திருவிழா நடத்தப்படுகிறது.
மத்திய அமைச்சரின் பதவிகளுக்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:
"முக்கிய சுற்றுலாத் தலங்களாக கலங்கரை விளக்கங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தலைப்பில் மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சியின் போது நான் கூறியது:
https://youtu.be/kP_qEIipwqE?si=-_wpXAj5aoIdSXls"
***
ANU/AP/BR/AG
(Release ID: 1960335)
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam